காங்கிரஸ் தலைவராக காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை தலைவராக்க முடியுமா? மோடி சவால்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு தலைவராக்கும் துணிவிருக்கிறதா என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவராக காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை தலைவராக்க முடியுமா? மோடி சவால்


அம்பிகாபுர்: காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைத் தவிர வேறு ஒருவரை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு தலைவராக்கும் துணிவிருக்கிறதா என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார்.

சட்டீஸ்கர் சட்டப்பேரவைக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நவம்பர் 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அங்கு நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, குறைந்தது 5 ஆண்டுகளுக்காவது காங்கிரஸ் கட்சியின் தலைவராக காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவரைத் தவிர வேறு ஒருவரை நியமித்தால், ஜவகர்லால் நேரு உருவாக்கியது ஒரு ஜனநாயக அமைப்பு என்பதை நாங்கள் நம்புவோம் என்று மோடி தெரிவித்துள்ளார்.

நான் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு சவால் விடுகிறன். அந்த கட்சியிலேயே காந்தியின் குடும்பத்தைச் சேராத சில நல்லத் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களை தலைவர்களாக்கிக் காட்டட்டும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 4 தலைமுறைகளாக நாட்டை காங்கிரஸ் கட்சி ஆண்டுள்ளது. அப்போது அந்த கட்சி செய்த விஷயங்கள் என்ன என்பதை பட்டியலிடட்டும். இந்தியாவில் உள்ள ஏழைகளின் கஷ்டம் என்னவென்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. அது கஷ்டமும் கூட. ஆனால் ஒரு தேனீர் விற்பனையாளரால் நிச்சயம் உணர முடியும் என்றும் மோடி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com