மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரம்: பிரதமர், முதல்வர் மீது ராகுல் குற்றச்சாட்டு

பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் மிகப் பெரிய ஊழல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) குற்றம்சாட்டினார்.
மத்தியப் பிரதேச தேர்தல் பிரசாரம்: பிரதமர், முதல்வர் மீது ராகுல் குற்றச்சாட்டு

பண மதிப்பிழப்பு நடவடிக்கை நாட்டின் மிகப் பெரிய ஊழல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) குற்றம்சாட்டினார். 

மத்தியப் பிரதேசம் உட்பட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார். அவர் மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 

"2016-இல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில்களை செய்பவர்கள் உள்ளிட்டவர்களை மோடி வங்கிக்கு வெளியே வரிசையில் நிற்கவைத்தார். அந்த நேரத்தில், கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருந்த நீரவ் மோடியையோ அல்லது மெஹூல் சோக்ஸியையோ வரிசையில் பார்த்தீர்களா?

ஏழை மக்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மோடி தனது நண்பர்களிடம் வழங்கினார். 

சீனா ஒரு நாளைக்கு 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. அதேசமயம், ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் இருக்கும்பட்சத்திலும் இந்திய அரசு ஒரு நாளைக்கு 450 வேலைவாய்ப்புகளையே உருவாக்குகிறது. 

மொத்த மத்தியப் பிரதேசத்துக்கும் வியாபம் ஊழலில் சிவராஜ் சௌஹான் மற்றும் அவரது குடும்பத்தினரின் பங்கு என்ன என்பது தெரியும். மத்தியப் பிரதேசத்தில், மருத்துவமனைகளும், பள்ளிகளும் தனியார்மயமாக்கப்பட்டதால், ஏழை மக்கள் அதை அணுக முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 1,00,000 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com