தெலங்கானா: வேட்பாளர்கள் செலவுத் தொகை ரூ.10,000-ஆகக் குறைப்பு

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகையை நாளொன்றுக்கு ரூ.20,000-லிருந்து ரூ.10,000-ஆகத் தேர்தல் ஆணையம்


தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகையை நாளொன்றுக்கு ரூ.20,000-லிருந்து ரூ.10,000-ஆகத் தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது.
இது குறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேட்பாளர்கள் செலவு செய்யும் தொகை நாளொன்றுக்கு ரூ.10,000-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு இது ரூ.20,000-ஆக இருந்தது. இந்த நடவடிக்கை சட்டவிரோத பணப்பறிமாற்றத்தைத் தடுக்கவும், வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படுவதைத் தடுக்கவும் உதவும். இது குறித்து கண்காணிப்பு நடத்த, மாநில நிதித்துறையின் நுண்ணறிவுப் பிரிவுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து, காவல் துறையினர் மற்றும் வருமான வரித்துறையினரால் ரூ.70 கோடி அளவிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுங்கத் துறையினரால் ரூ.6.70 கோடி மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்திலுள்ள பெருநிறுவனங்கள் தேர்தல் நடைபெறவுள்ள டிசம்பர் 7-ஆம் தேதி அன்று, அதன் பணியாளர்கள் வாக்களிக்க வசதியாக அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். விடுமுறை அளிக்க முடியாத நிலையில், பணியாளர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் அடிப்படையில் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் போன்றவை வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com