லஞ்சத்தின் கோரத் தாண்டவம்: அஜ்மல் கசாப்புக்கு இருப்பிடச் சான்றளித்த அவலம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரோடு பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.
லஞ்சத்தின் கோரத் தாண்டவம்: அஜ்மல் கசாப்புக்கு இருப்பிடச் சான்றளித்த அவலம்


கான்பூர்: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் போது உயிரோடு பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் கடந்த 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 21ம் தேதியிடப்பட்டு, உத்தரப்பிரதேசத்தில் அஜ்மல் கசாப் பெயரில் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டுள்ள அவலம் ஊடகங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதச மாநிலம் பிதோனாவில் கசாப்பின் பெயரில் இருப்பிடச் சான்றி வழங்கப்பட்டுள்ளது.

ஒருவர் வேண்டும் என்றே பிதோனாவில் ஒரு போலி முகவரி கொடுத்து கசாப்பின் புகைப்படத்துடன் இருப்பிடச் சான்று கேட்டு விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் மீது எந்த விசாரணையும் உரிய நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பயங்கரவாதிக்கு எந்த விசாரணையும் நடத்தப்படாமல் இருப்பிடச் சான்று வழங்கிய வருவாய்த் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com