இந்திரா காந்தி பிறந்ததினம்: மோடி, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் திங்கள்கிழமை அவருக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய உள்துறை அமைச

இது குறித்து, பிரதமர் மோடி சுட்டுரையில், "நாட்டின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்ததினத்தில், அவருக்கு மரியாதை செலுத்த கடமைப்பட்டுள்ளேன்' என்று பதிவிட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இந்திரா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள தில்லி சக்தி ஸ்தலத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரும் இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.
ராணி லட்சுமிபாய்க்கு அஞ்சலி: ராணி லட்சுமிபாயின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, "காலனிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய லட்சுமிபாயின் வீரம் என்றும் மறக்க முடியாதது. அவரைப் போன்ற பெருந்தலைவர்களால் தான் இந்தியா சுதந்திரம் பெற்றது' என்று சுட்டுரையில் பதிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com