மோடி ஆட்சியில் வலுவிழந்து வரும் சுற்றுச் சூழல் சட்டங்கள்

மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு ஆட்சியமைந்த பிறகு நாட்டின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் வலுவிழந்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ்
மோடி ஆட்சியில் வலுவிழந்து வரும் சுற்றுச் சூழல் சட்டங்கள்

மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு ஆட்சியமைந்த பிறகு நாட்டின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் வலுவிழந்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி
குறித்து ஜெய்ராம் ரமேஷ் எழுதிய புத்தகத்தின் ஹிந்தி மொழியாக்க நூல் வெளியீட்டு விழா தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அந்நூலை வெளியிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்ராம் ரமேஷ், அவர்களிடம் கூறியதாவது:
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் மற்றும் வன உரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களே அதற்கு சான்று. அதனால், பயன்கள் எதுவும் இல்லை; மாறாக பாதிப்புதான் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்த நாள் முதலே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்கள் வலுவிழக்கத் தொடங்கிவிட்டன. இந்திரா காந்தியையும், மோடியையும் ஒப்பிடும் போக்கு சரியல்ல. இரண்டு தலைவர்களும்  தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவர்கள் என்பது மட்டும்தான் ஒற்றுமையான விஷயம். மற்றபடி இந்திரா முற்றிலும் வித்தியாசமானர். மோடியைப் போன்று திடீரென பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு மக்களை அவர் அவதிக்குள்ளாக்கவில்லை என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com