அமெரிக்காவில் சாலை விபத்து: ஆந்திர சட்ட மேலவை உறுப்பினர் பலி

ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையில் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினராக இருக்கும் எம்.வி.வி.எஸ். மூர்த்தி  அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.
அமெரிக்காவில் சாலை விபத்து: ஆந்திர சட்ட மேலவை உறுப்பினர் பலி

ஆந்திரப் பிரதேச சட்ட மேலவையில் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினராக இருக்கும் எம்.வி.வி.எஸ். மூர்த்தி  அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த மற்றும் பிரபல தலைவரான மூர்த்தி(76), 1983-ஆம் ஆண்டில் இருந்து அக்கட்சிக்காக தொண்டாற்றியுள்ளார். அக்கட்சியின் நிறுவனர் என்.டி. ராமாராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்.  முதல்முதலில் 1991-ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் தொகுதியின் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 1999-ஆம் ஆண்டு மக்களவை எம்.பி. யாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு மாநில சட்ட மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 
கல்வித்துறையில் ஆர்வம் மிக்க அவர், விசாகப்பட்டினம் அருகே ருசிகொண்டா பகுதியில் காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரியை நிறுவினார். கிழக்கு கோதாவரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல கல்லூரிகளை நிறுவியுள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் காந்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.
அங்கு அலாஸ்கா பகுதியருகே நெடுஞ்சாலையில் அவரது கார், லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். மூர்த்தியின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக அங்குள்ள தெலுங்கு மக்கள் சங்க அமைப்புகள் அமெரிக்க அதிகாரிகளுக்கு உதவி புரிகின்றனர்.
மூர்த்தியின் இறப்புக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட அமைச்சர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், "மூர்த்தியின் மரணச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது மரணம்  கல்வித் துறைக்கும் அரசியலுக்கும் மிகப் பெரிய இழப்பு'  என்று கூறினார். மேலும், கட்சித் தலைவர்கள் பலர் சாலை விபத்தில் இறப்பது வேதனை அளிப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com