இந்தியர்கள் தொலைக்காட்சியை விடவும் இதில்தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.. ஆய்வு

இந்தியர்கள் பலரும் தற்போது தொலைக்காட்சியை விடவும், அதிக நேரத்தை ஆன்லைனில் விடியோக்களைப் பார்க்க செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியர்கள் தொலைக்காட்சியை விடவும் இதில்தான் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.. ஆய்வு


புது தில்லி: இந்தியர்கள் பலரும் தற்போது தொலைக்காட்சியை விடவும், அதிக நேரத்தை ஆன்லைனில் விடியோக்களைப் பார்க்க செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

லைம்லைட் நெட்வொர்க் நடத்திய ஆய்வில், தெரிய வந்திருப்பது என்னவென்றால், இந்தியர்கள் ஒவ்வொரு வாரமும் 8 மணி நேரம் 28 நிமிடங்கள் ஆன்லைனில் விடியோ பார்க்க செலவிடுவதாகவும், இதைவிட குறைந்த நேரமே அதாவது ஒரு வாரத்தில் 8 மணி நேரம் 8 நிமிடங்கள் மட்டுமே தொலைக்காட்சியைப் பார்ப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இதில்லாமல், ஆன்லைனில் விடியோ பார்ப்பதில் உலக மக்களின் சராசரியே ஒரு வாரத்துக்கு 6 மணி நேரம் 45 நிமிடமாக இருக்கும் நிலையில், இந்தியர்கள் அதை விட அதிக நேரம் ஆன்லைனில் விடியோ பார்ப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஆன்லைன் மூலம் செய்தி, சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போன்றவற்றைப் பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com