மிஸோரம் தேர்தலில் பாஜக தனித்து போட்டி

மிஸோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
மிஸோரம் தேர்தலில் பாஜக தனித்து போட்டி

மிஸோரம் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

அய்சாலில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதுகுறித்து அவர் கூறியதாவது:
மிஸோரம் சட்டப் பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் தேவைப்பட்டால் பாஜக வேட்பாளர்களை நிறுத்தும். பாஜகவின் பினாமியாக மிஸோ தேசிய முன்னணி செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் தெரிவிப்பது முட்டாள்தனமாக உள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி, மிஸோ தேசிய முன்னணி ஆகிய 2 கட்சிகளையும் எதிர்த்தே பாஜக போட்டியிடவுள்ளது.

மிஸோரம் மக்களின் உணவு வழக்கங்கள், கலாசாரம், மதம் ஆகியவற்றை பாஜக மதிக்கிறது. மிஸோரத்தை ஆளும் லால் தன்வாலா தலைமையிலான காங்கிரஸ் அரசு, மாநிலத்தில் 10 ஆண்டுகால ஆட்சியில் ஊழலில் ஈடுபட்டது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், மிஸோரத்தில் எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதியையும் காங்கிரஸ் அரசு ஏற்படுத்தவில்லை. மத்திய அரசால், மிஸோரத்துக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது. இதையும் பயன்படுத்தவில்லை.

மிஸோரம் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மாநிலம் முழுவதும் 4 வழிச்சாலை அமைக்கப்படும். லுங்லி, சாம்பாய் மாவட்டங்களில் புதிதாக பொறியியல் கல்லூரிகள் கட்டித் தரப்படும் என்றார் ராம் மாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com