ரூபாய் வீழ்ச்சி:  சுரேஷ் பிரபு தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்

ரூபாய் மதிப்பு சரிவு, வர்த்தகப் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதிப்பதற்காக, மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் பல்வேறு அமைச்சகங்களுக்கு
ரூபாய் வீழ்ச்சி:  சுரேஷ் பிரபு தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்

ரூபாய் மதிப்பு சரிவு, வர்த்தகப் பற்றாக்குறை ஆகிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதிப்பதற்காக, மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், மத்திய நிதியமைச்சத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறை, நிலக்கரித் துறை அமைச்சகம், உருக்கு அமைச்சகம், பெட்ரோலிய அமைச்சகம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மருந்து தயாரிப்புத் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது நிகழாண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை இந்திய ரூபாயின் மதிப்பு 13 சதவீதம் குறைந்து விட்டது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான செலவு மேலும் அதிகரிக்கும். மேலும், ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்றுமதி- இறக்குமதி இடையே மிகப்பெரிய அளவில் வித்தியாசம் ஏற்பட்டு வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும். 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த ஜூலை மாதம் வர்த்தகப் பற்றாக்குறை 18.02 பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் ரூ.1.32 லட்சம் கோடி) இருந்தது. அது, கடந்த ஆகஸ்ட் மாதம் 17.4  பில்லியன் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.27 லட்சம் கோடி) குறைந்து விட்டது. இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு, வர்த்தகப் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com