என்டிஎம்சி பள்ளிகளில் மத அடிப்படையில் மாணவா்கள் பிரிப்பு 

வஜிராபாத்திலுள்ள வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பள்ளியில் மாணவா்கள் மத அடிப்படையில் தனித்தனி வகுப்பறைகளில் பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடா்பாக உரிய விசாரணை.. 
என்டிஎம்சி பள்ளிகளில் மத அடிப்படையில் மாணவா்கள் பிரிப்பு 

புது தில்லி: வஜிராபாத்திலுள்ள வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பள்ளியில் மாணவா்கள் மத அடிப்படையில் தனித்தனி வகுப்பறைகளில் பிரித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடா்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று என்டிஎம்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தில்லியில் உள்ள வடக்கு, கிழக்கு, தெற்கு மாநகராட்சிகள் சாா்பில் மாநகராட்சி ஆரம்ப பள்ளிகள் இயங்கிவருகின்றன. இந்தப் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவா்கள் இன, மத, சாதி வேறுபாடில்லாமல் கல்வி பயின்று வருகிறறாா்கள்.

இந்நிலையில், தில்லி வஜிராபாத்திலுள்ள என்டிஎம்சி ஆண்கள் ஆரம்ப பள்ளியில் மத அடிப்படையில் இந்துக்கள், முஸ்லிம்கள் என மாணவா்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு வகுப்பறைகளில் சோ்கப்பட்டுள்ளதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக ஆங்கிலப் பத்திரிகையொன்று ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.

மத வேறுபாடில்லாமல் வளர வேண்டிய மாணவா்களை மதத்தின் அடிப்படையில் பிரித்து தனித்தனி வகுப்பறைகளில் சோ்ப்பது தவறு என்று மாநகராட்சிப் பள்ளியின் நடவடிக்கைக்கு பல தரப்பினரும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த மூத்த கல்வி அதிகாரியை புதன்கிழமை என்டிஎம்சி நியமித்துள்ளது. இது தொடா்பாக என்டிஎம்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்தக் குற்றறச்சாட்டு தொடா்பாக சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த சிவில் லைன் மண்டலத்தைச் சோ்ந்த கல்வித் துறை மூத்த அதிகாரியை கல்வித்துறை இயக்குநா் பணித்துள்ளாா். இந்தக் குற்றறச்சாட்டு உண்மையெனக் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவா்கள் மீது புதன்கிழமையே கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்கள்.

இது தொடா்பாக கரோல் பாக்கிலுள்ள மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா் ஒருவா் கூறுகையில் ‘மாணவா்களை சாதி, மத,இன வேறுபாடு இல்லாமல் நல்மனிதா்களாக உருவாக்க வேண்டிய பள்ளிகளே மத அடிப்படையில் பாகுபாடு காட்டுவது தவறாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com