திருப்பதி வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: செம்மரம் கடத்த முயன்றதாக தமிழர் ஒருவர் கைது 

திருப்பதியில் வனப்பகுதியில் செம்மரம் கடத்த முகாமிட்டுருந்ந கும்பலை சுற்றிவளைத்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
திருப்பதி வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: செம்மரம் கடத்த முயன்றதாக தமிழர் ஒருவர் கைது 

திருப்பதியில் வனப்பகுதியில் செம்மரம் கடத்த முகாமிட்டுருந்ந கும்பலை சுற்றிவளைத்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

திருப்பதியை அடுத்த கரகம்பாடி வனப்பகுதியில் செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் செம்மரம் கடத்த வந்த 25 பேர் அடங்கிய கும்பலை போலீசார் சுற்றிவளைத்தனர்.

இதையடுத்து அந்த கும்பல், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்த போலீசார் கும்பலில் இருந்த ஒருவரை கைது செய்தனர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். 

கைது செய்யப்பட்ட நபர் திருவள்ளூர் மாவட்டம் செங்கத்தைச் சேர்ந்த அசோக் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுதது செம்மரக் கடத்தல் கும்பல் வைத்திருந்த சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்த போலீசார், செம்மரம் கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com