ம.பி. சட்டப்பேரவை தேர்தல்: 200 தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் போட்டி

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி) தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி) தெரிவித்துள்ளது.
 மத்திய பிரதேசத்தில் 230 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 200 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தேசியவாத காங்கிரஸ் வெள்ளிக்கிழமை கூறியது.
 அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை சட்ட மேலவை உறுப்பினர் ராஜேந்திர ஜெயின் மற்றும் கட்சியின் குஜராத் மாநில செய்தி தொடர்பாளர் நகுல் சிங் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
 ஒரே மாதிரியான கொள்கை மனப்பான்மை கொண்ட கட்சியினருடன் கூட்டணி அமைக்க விரும்புகிறோம் என்றனர். தேர்தல் அறிக்கை குறித்து கூறுகையில், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது மட்டுமன்றி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். முறையான பாசன வசதியை ஏற்படுத்தி தருவோம். மாநிலத்தின் கல்வித் துறையில் உண்மையான சீர்திருத்தத்தை கொண்டு வருவோம். பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாநிலத்தில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சியால் மக்கள் அனைவரும் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதற்கு தேசியவாத காங்கிரஸ் முக்கியத்துவம் தரும் என்று கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com