முத்தலாக் தடை மசோதா விரைவில் நிறைவேறும்

முத்தலாக் நடைமுறையை தடை செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன் வாயிலாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான
முத்தலாக் தடை மசோதா விரைவில் நிறைவேறும்

முத்தலாக் நடைமுறையை தடை செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் நிறைவேறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன் வாயிலாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான உரிமைகளையும், நீதியையும் நிலை நாட்ட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
 மூன்று முறை தலாக் கூறி மனைவியை விவகாரத்து செய்யும் இஸ்லாமிய நடைமுறை சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிரடித் தீர்ப்பை வெளியிட்டது.
 இதுதொடர்பாக உரிய சட்டத்தை வகுக்குமாறும் மத்திய அரசை பரிந்துரைத்தது.
 அதன்படி, இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா வரையறுக்கப்பட்டது. முத்தலாக் கூறி விவகாரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க அதில் வகை செய்யப்பட்டுள்ளது.
 அந்த மசோதா மக்களவையில் நிறைவேறிய போதிலும், மாநிலங்களவையைப் பொருத்தவரை, அதை நாடாளுமன்ற பரிசீலனைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிய பிறகே நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், முத்தலாக் தடை மசோதாவை அமலாக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
 இந்தச் சூழலில், மனித உரிமைகள் மேம்பாட்டு ஆணையத்தின் 25-ஆவது நிறுவன தின விழா
 தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது:
 மனித உரிமைகளைக் காக்கவும், மக்கள் நலனை மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெவ்வேறு திட்டங்களையும் வகுத்து வருகிறது. அதன் வாயிலாக கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர்.
 "ஆயுஷ்மான் பாரத்' எனப்படும் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 50 கோடி பேருக்கு இலவச மருத்துவ சேவைகள் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. அத்திட்டம் தொடங்கப்பட்டு இரண்டரை வாரங்களே ஆன போதிலும் அதன் மூலம் இதுவரை 50 ஆயிரம் பயனடைந்துள்ளனர்.
 இது ஒருபுறமிருக்க, மக்களுக்கான உரிமைகளைக் காக்கும் நோக்கில் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று முத்தலாக் தடைச் சட்டம். அதுதொடர்பான மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 அதன் வாயிலாக ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான நீதி உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் பிரதமர் மோடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com