"டிட்லி' புயல்: ரூ.1,200 கோடி நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு ஆந்திரம் கடிதம்

"டிட்லி' புயலால் இரு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரண நிதியாக ரூ. 1200 கோடி அளிக்கக் கோரி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
"டிட்லி' புயல்: ரூ.1,200 கோடி நிவாரண நிதி கோரி மத்திய அரசுக்கு ஆந்திரம் கடிதம்

"டிட்லி' புயலால் இரு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரண நிதியாக ரூ. 1200 கோடி அளிக்கக் கோரி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 வங்கக் கடலில் உருவான "டிட்லி' புயலால் கடந்த 4 நாள்களாக பெய்த மழையால் ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் ஆகிய இரு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் 7 பேரும், விஜயநகரத்தில் ஒருவரும் உயிரிழந்தனர். வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் விழுந்தும் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டு தொகையாக சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
 விவசாயத் துறைக்கு ரூ. 800 கோடி இழப்பும், தோட்டக்கலை துறைக்கு ரூ. 1000 கோடி இழப்பும், மின்சாரத் துறைக்கு ரூ. 500 கோடி இழப்பும், பஞ்சாயத்து துறைக்கு ரூ.100 கோடி இழப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் பல துறைகளில் நூற்றுக்கணக்கான கோடிகள் அளவிலான பொருள்கள் சேதமடைந்தது முதல் கட்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.
 அதனால் இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 1200 கோடி வழங்க கோரி மத்திய அரசுக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 "டிட்லி' புயல் மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ரூ. 2800 கோடி அளவிலான விவசாய பொருள்களும், கட்டடங்களும் சேதமடைந்துள்ளன என்று முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்தது. போர்கால அடிப்படையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கடும் பாதிப்பை கவனத்தில் கொண்டு, இடைக்கால நிவாரண நிதியாக ரூ. 1200 கோடி உடனடியாக வழங்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
 ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் பாலசா பகுதியில் வெள்ளிக்கிழமை முதல் தங்கியிருக்கும் சந்திரபாபு நாயுடு, மீட்பு பணி நடவடிக்கைகள் முடிந்து மாவட்டம் பழைய நிலைக்கு மீண்ட பின்னரே அங்கிருந்து கிளம்ப உள்ளதாக தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com