ராஜஸ்தான்: தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பாஜக தீவிரம்

ராஜஸ்தான் மாநிலத்துக்கு வரும் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டு, ராஜஸ்தான் மாநிலத்துக்கு

ராஜஸ்தான் மாநிலத்துக்கு வரும் டிசம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டு, ராஜஸ்தான் மாநிலத்துக்கு தேர்தல் அறிக்கை தயார் செய்ய உள்ளதாக அந்த மாநில பாஜக தெரிவித்துள்ளது.
 தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் தலைமையிலான பாஜகவின் மாநில தேர்தல் அறிக்கை குழுவின் 2-ஆவது கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
 கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடையே ரத்தோர் கூறியதாவது: பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் தேர்தல் அறிக்கைகளை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னர் ராஜஸ்தானுக்கான தேர்தல் வரைவு அறிக்கை 2 வாரங்களுக்குள் முடிவு செய்யப்படும். அந்த அறிக்கை மாநில தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு இறுதி செய்யப்படும். சமூகத்தின் பல்வேறு தரப்பில் உள்ள பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளும் முடிந்த அளவுக்கு அறிக்கையில் சேர்க்கப்படும். ராஜஸ்தானில் பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 2013- ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை 90 சதவீதம் நிறைவேற்றி விட்டோம். இந்த முறையும் கட்சியால் நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அளிப்போம் என்று ரத்தோர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com