பன்றிக் காய்ச்சலை ஒடுக்க தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல், ஸிகா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா செவ்வாய்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பன்றிக் காய்ச்சலை ஒடுக்க தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல், ஸிகா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா செவ்வாய்கிழமை ஆலோசனை நடத்தினார். குறிப்பாக மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்கள், கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் இதர மாநிலங்களின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். 

மேலும் அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விடியோ கான்ஃபிரன்சிங் முறையில் புதன்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டறிந்தேன். பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக உள்ளது. 

போர்கால அடிப்படையில் அனைத்து விதமான தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பன்றிக் காய்ச்சல் மற்றும் ஸிகா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது. இந்தியாவிடம் போதிய மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள ஸிகா வைரஸ் பாதிப்பு தடுக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசு ஒழிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். எனவே யாரும் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com