காங்கிரஸில் இணைந்தார் ஜஸ்வந்த் சிங் மகன்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக நிறுவனர்களுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங்கின் மகன் மணவேந்திர சிங் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் இணைந்தார்.
காங்கிரஸில் இணைந்தார் ஜஸ்வந்த் சிங் மகன்

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக நிறுவனர்களுள் ஒருவரான ஜஸ்வந்த் சிங்கின் மகன் மணவேந்திர சிங் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியின் இணைந்தார். 

சியோ சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் மகன் மணவேந்திர சிங். இவர், கடந்த செப்டம்பர் மாதம் பாஜகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். 

இதையடுத்து, அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலை ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அசோக் கெலாட், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், ராஜஸ்தான் பிரதேசம் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் மகாராஷ்டிரா பாஜக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆஷிஷ் தேஷ்முக்கும் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மணவேந்திர சிங் கூறுகையில், "முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் பாஜகவால் நாங்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறோம்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com