இறுதிக்கட்ட உள்ளாட்சி தேர்தல்: காஷ்மீரில் 4.3 % வாக்குப் பதிவு

ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்மூலம், 4 கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு வந்தது.
இறுதிக்கட்ட தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிகவும் குறைந்தபட்சமாக 4.3 சதவீத வாக்குகள் பதிவானது. 
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்ரீநகர், கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 308 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது.
ஸ்ரீநகர் மாநகராட்சியில் 24 வார்டுகளில் உள்ள 2.42 லட்சம் வாக்காளர்களில் 4 சதவீதம் மட்டுமே அதாவது, 9,678 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
கந்தர்பாலில் 8,908 வாக்களார்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். 
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 6 மாவட்டங்களில் உள்ள 8 நகராட்சி அமைப்புகளில் 2 அமைப்புகளுக்கு மட்டுமே வாக்குப் பதிவு நடைபெற்றது. எஞ்சியுள்ள 6 நகராட்சி அமைப்புகளின் சிலவற்றில் எவரும் போட்டியிடவில்லை, சில இடங்களில் போட்டியின்றி சிலர் தேர்வு செய்யப்பட்டனர். 
மொத்தம் 36 வார்டுகளில் 151 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com