குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை: புகார் தெரிவிப்பதற்கான கால வரம்பை ரத்து செய்ய மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க கால வரம்பு நிர்ணயிக்கும் நடைமுறையை நீக்குவதற்கு மத்திய சட்ட அமைச்சகம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க கால வரம்பு நிர்ணயிக்கும் நடைமுறையை நீக்குவதற்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அளித்த பரிந்துரையை ஏற்று இந்த ஒப்புதலை சட்ட அமைச்சகம் அளித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் மகளிர் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி 
செவ்வாய்க்கிழமை கூறுகையில், குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்பாக புகார் தெரிவிப்பதற்கான கால வரம்பு தற்போது நடைமுறையில் உள்ளது. 
அதை நீக்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரைத்திருந்தோம். அதை அந்த அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றார்.
முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி, மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியிருந்தார்.
அதில், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்வது பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களாக இருப்பதால் புகார் தெரிவிக்க முடியாமல் போகிறது. 
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்பாக 10 ஆண்டுகளில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பிறகும் புகார் தெரிவிக்க அனுமதி அளிக்க வேண்டும். அந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரசமைப்புச் சட்டம் 468-ஆவது பிரிவின் படி, குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டால், 3 ஆண்டுகளுக்குள் புகார் அளிக்கப்பட வேண்டும்.
சட்டப் பிரிவு 473-இன் படி, காலதாமதாக புகார் தெரிவித்ததற்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் பட்சத்தில் நீதிபதி நினைத்தால் வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்கலாம் என்ற அம்சம் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com