பேச்சுவார்த்தைக்கான சூழலை உண்டாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது - ரவீஷ் குமார்

இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 
பேச்சுவார்த்தைக்கான சூழலை உண்டாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது - ரவீஷ் குமார்

இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான், இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடனான உறவு குறித்து அவர் தெரிவித்தார்.  அவர் பேசியதாவது, 

"அமைச்சர் எம்ஜே அக்பர் ராஜிநாமா செய்த பிறகு தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். அது குறித்து பேச என்னிடம் எதுவும் இல்லை. இந்தியாவுக்கு திரும்பிய பிறகு நடைபெற்ற கூட்டத்தில் அவர் அங்கம் வகித்தார். ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அக்பருக்கு இடையிலான சந்திப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது.  

எஸ்-400 ஏவுகணை நமது தேச நலனுக்காக செயல்படுத்தப்பட்டது. எங்களது கருத்துகளை அமெரிக்காவிடம் பகிர்ந்துள்ளோம். இந்த பிரச்னை தீரும் வரை அமெரிக்காவுடன் தொடர்பிலேயே இருப்பது தான் எங்கள் நோக்கம். எங்களது எதிர்பார்ப்புகளை அமெரிக்காவுக்கு தெரியபடுத்தியுள்ளோம். ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை இந்தியா பாதிப்பதற்காக அல்ல என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ தெரிவித்திருக்கிறார்.   

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையிலான உறவை பாதிக்கவில்லை. பிரான்ஸ் நாட்டுடனான உறவை மகிழ்ச்சியுடன் தொடருவோம். 

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான எந்தவித பேச்சுவார்த்தை குறித்தும் எனக்கு தெரியாது. எங்களது நிலைப்பாட்டை தெளிவாக விவரித்துள்ளோம். பேச்சுவார்த்தையும், பயங்கரவாதமும் ஒரே நேரத்தில் நடைபெறாது. அதனால் தான், இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களி
ன் சந்திப்பு ரத்தானது. பேச்சுவார்த்தைக்கான உகந்த சூழலை உண்டாக்க பாகிஸ்தானுக்கு தான் பொறுப்பு உள்ளது. அதாவது, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத கட்டமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொள்ளவேண்டும்.

ஹெச்1-பி விசா விவகாரம் முக்கியமான விஷயம். இந்த விஷயத்தை அமெரிக்காவின் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளோம். இந்தியா, அமெரிக்கா இடையிலான 2+2 பேச்சுவார்த்தையின் போதும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும் என்பது தான் நோக்கம். 

இலங்கையில் இருக்கும் அனைத்து அரசியல் கருத்துகளும், இந்தியாவுடன் நெருக்கமான உறவு கொள்வதையே வலியுறுத்துகின்றன. இந்த வலிமையான உறவையே இந்தியாவும் விரும்புகிறது. இருநாடுகளுக்கு இடையிலான இந்த உறவை மேலும் வலுப்படுத்த இலங்கை பிரதமர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com