சபரிமலை விவகாரம்: பிரதமர் வாகனத்தை தடுத்து நிறுத்துவேன் என்று கூறிய பெண்ணிய ஆர்வலர் கைது

ஷீரடிக்கு செல்லும் பிரதமர் மோடியின் வாகனத்தை தடுத்து நிறுத்துவேன் என்று கூறிய பெண்ணிய ஆர்வலர் த்ருப்தி தேசாயை புணே போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
சபரிமலை விவகாரம்: பிரதமர் வாகனத்தை தடுத்து நிறுத்துவேன் என்று கூறிய பெண்ணிய ஆர்வலர் கைது

ஷீரடிக்கு செல்லும் பிரதமர் மோடியின் வாகனத்தை தடுத்து நிறுத்துவேன் என்று கூறிய பெண்ணிய ஆர்வலர் த்ருப்தி தேசாயை புணே போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 

சபரிமலை கோயில் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோயிலுக்குள் நுழைய பெண்கள் முற்பட்டனர். ஆனால், அவர்கள் போராட்டக்காரர்களால் நிலக்கல் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் சம்பவமும் நடைபெற்றது. இதையடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

சபரிமலை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று அகமத்நகர் காவல்துறை கண்காணிப்பாளரிடம்  பெண்ணிய ஆர்வலர் த்ருப்தி தேசாய் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) ஷீரடி கோயிலுக்கு சென்றிருந்தார். 

இதையடுத்து, தன்னுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அவரது வாகனத்தை தடுத்து நிறுத்துவேன் என்று த்ருப்தி தேசாய் எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகும் சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. செய்திகள் சேகரிக்க சென்ற பெண்களும் தாக்கப்பட்டனர். 

அதிகாலையில் நான் ஷீரடிக்கு செல்ல முற்பட்டபோது போலீஸார் என்னை கைது செய்தனர். இதே மாதிரியான கடுமையான நடவடிக்கைகள் கேரளாவில் எடுக்கப்பட்டிருந்தால் சபரிமலை கோயிலுக்குள் இன்று பெண்கள் சென்றிருப்பார்கள். எனக்கு போராடுவதற்கான உரிமை இருக்கிறது. தற்போது இந்த கைது நடவடிக்கையின் மூலம், நமது ஜனநாயக உரிமையை ஒடுக்க போலீஸார் முயற்சிக்கின்றனர்" என்றார். 

முன்னதாக, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்ல தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, விரைவில் பெண்களுடன் சேர்ந்து சபரிமலை கோயிலுக்கு செல்வேன் என்று த்ருப்தி தேசாய் தெரிவித்தார். 

இவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்த தர்காவில் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பெண்களுடன் சேர்ந்து அதே தர்காவில் நுழைந்து வழிபாடு நடத்தினார் என்பது நினைவுகூரத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com