தாய் இருந்த அதே கருவறையில் வளர்ந்த சிசு: இந்தியாவில் இது முதல் முறை

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 28 வயது பெண்ணுக்கு புணேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
தாய் இருந்த அதே கருவறையில் வளர்ந்த சிசு: இந்தியாவில் இது முதல் முறை


புணே: கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 28 வயது பெண்ணுக்கு புணேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுபோன்று நடந்திருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும் என்று சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

வதோதராவைச் சேர்ந்த மீனாட்சி வாலன் என்பவருக்கு கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. மீனாட்சிக்கு, அவரது தாயார் தனது கருப்பையை தானமாக வழங்கியிருந்தார்.

கருவைத் தாங்கும் சக்தி இல்லாத காரணத்தால் மீனாட்சிக்கு கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், ஐவிஎஃப் முறையில் கருத்தரித்தார்.

தொடர் கண்காணிப்பில் இருந்த மீனாட்சி, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் நேற்று பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

இதுபோன்று கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்திருப்பது இந்தியாவில் மட்டுமல்ல, ஆசியாவிலும் இதுவே முதல் முறை என்று மருத்துவர் வார்ட்டி தெரிவித்துள்ளார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தனது தாய் இருந்த அதே கருவறையில்தான் இந்த சிசுவும் வளர்ந்திருக்கிறது என்பதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com