எஸ்-400 ஏவுகணையை இந்தியா வாங்கினால் பிராந்திய அமைதி மேலும் சீர்குலையும்: பாகிஸ்தான்

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணையை வாங்கும் இந்தியாவின் முடிவு, பிராந்திய அமைதியை மேலும் சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை கூறியது.


ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணையை வாங்கும் இந்தியாவின் முடிவு, பிராந்திய அமைதியை மேலும் சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் வெள்ளிக்கிழமை கூறியது. மேலும், இந்த ஒப்பந்தம் ஆயுத போட்டியை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாவது:
கண்டம் விட்டு கண்டம் பாயும்(பாலிஸ்டிக்) ஏவுகணைகளை ராணுவ பாதுகாப்பு அமைப்பில் ஏற்படுத்தும் முயற்சியாக, ரஷ்யாவிடம் இருந்து இந்த ஏவுகணையை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த முடிவு தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியை மேலும் கெடுக்கும். அதுமட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கிடையே ஆயுத போட்டியை மீண்டும் உருவாக்கும் சூழலை ஏற்படுத்தும். எந்தவிதமான ஆயுதங்களைக் கொண்டு பாகிஸ்தானை தாக்க முயற்சித்தாலும் அதை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இன்றி நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்திலும் அந்த மனப்பான்மையே தொடரும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த மாத தொடக்கத்தில் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த போது, இந்திய ராணுவப் பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை ரூ. 37 ஆயிரம் கோடிக்கு கொள்முதல் செய்வதற்கான முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
இந்த எஸ்-400 டிரையம்ப் ஏவுகணையானது தரையிலிருந்து புறப்பட்டு விண்ணில் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com