தெலங்கானாவில் ராகுல் இன்று பிரசாரம்

வரும் டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தெலங்கானா மாநிலத்தில் சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 பிரசாரக் கூட்டங்களில்


வரும் டிசம்பர் மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தெலங்கானா மாநிலத்தில் சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 பிரசாரக் கூட்டங்களில் பேச உள்ளார்.
இது குறித்து, மாநில காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷ்ரவன் தாசோஜு தெரிவித்ததாவது:
அடிலாபாத் மாவட்டத்தின் பைன்சா பகுதியில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திலும், காமாரெட்டி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மற்றொரு பொதுக் கூட்டத்திலும் ராகுல் காந்தி சனிக்கிழமை பேச உள்ளார். பின்னர், ஹைதராபாத் செல்லும் அவர் ராஜீவ் காந்தி நினைவு நன்னம்பிக்கை யாத்திரை தொடங்கிய தினத்தைக் குறிக்கும் வகையில், சார்மினார் அருகே காங்கிரஸ் கொடியை ஏற்ற உள்ளார். 
இதைத்தொடர்ந்து, ராஜீவ் காந்தி நினைவு நன்னம்பிக்கை யாத்திரை விருதை, பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கே.ரோசய்யாவுக்கு ராகுல் வழங்குகிறார் என்று அவர் தெரிவித்தார்.
தொகுதிப் பங்கீடு: தேர்தல் ஆணையம் கடந்த 6-ஆம் தேதி, சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை அறிவித்த பின்னர், தெலங்கானா மாநிலத்துக்கு முதல் முறையாக ராகுல் காந்தி வருகை தருகிறார். மாநிலத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ள காங்கிரஸ் கட்சி, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் பயணத்தின்போது, தொகுதிப் பங்கீடு குறித்தும், வேட்பாளர் பட்டியல் குறித்தும் இறுதி செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com