ரஃபேல் விவகாரம்: தனியார் தொலைக்காட்சியிடம் ரூ.10,000 கோடி கேட்டு அவதூறு வழக்கு

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், தங்களது நிறுவனத்துக்கு எதிராக அவதூறான தகவல்களை வெளியிட்டதாக,


ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், தங்களது நிறுவனத்துக்கு எதிராக அவதூறான தகவல்களை வெளியிட்டதாக, என்டிடிவி ஆங்கில செய்தி தொலைக்காட்சி மீது ரிலையன்ஸ் இன்ஃபராஸ்டிரக்சர் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. ரூ.10,000 கோடி நஷ்டஈடு கேட்டு இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
என்டிடிவி ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் கடந்த 29-இல் ஒளிபரப்பான ட்ரூத் வெஸ்ஸஸ் ஹைப் நிகழ்ச்சியில், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தை மையமாக கொண்டு விவாதம் நடத்தப்பட்டது. 
இதில் தங்களது நிறுவனத்துக்கு எதிராக அவதூறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, என்டிடிவி தொலைக்காட்சி மீது ரிலையன்ஸ் இன்ஃபராஸ்டிரக்சர் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்கில், என்டிடிவி நிறுவனத்திடம் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.10,000 கோடி நஷ்டஈடு கோரியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை, அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனிடையே, தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள என்டிடிவி நிறுவனம், வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளவிருப்பதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாஜக அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. 
இந்த விவகாரத்தில், ரிலையன்ஸ் நிறுவனம் ஆதாயம் அடையும் வகையில் மத்திய அரசு செயல்பட்டதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com