குரங்குகள் கல் வீசி முதியவர் இறந்ததாக வழக்குப்பதிவு செய்ய குடும்பத்தினர் வலியுறுத்தல்

செங்கல் வீசி தாக்கியதில் 70 வயது முதியவர் இறந்ததாக குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் விநோதமான புகாரை அளித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

செங்கல் வீசி தாக்கியதில் 70 வயது முதியவர் இறந்ததாக குரங்குகள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அவரது குடும்பத்தினர் விநோதமான புகாரை அளித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
 பஹ்பத் அருகே திக்ரி கிராமத்தில் கடந்த 17ம் தேதியன்று இச்சம்பவம் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த தரம்பால் (70) என்ற முதியவர் அங்குள்ள செங்கல் குவியலுக்கு அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சில குரங்குகள் செங்கல் குவியல் மீது ஏறி, செங்கற்களை தூக்கி வீசி விளையாடின. அதில் சில கற்கள் தரம்பால் மீது விழுந்ததுடன், செங்கல் குவியலும் சரிந்து தரம்பால் மீது விழுந்தது. இதில் படுகாயமுற்ற தரம்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார்.
 இதனிடையே, தரம்பாலின் சகோதரர் கிருஷ்ணபால் சிங், தனது சகோதரர் சாவுக்கு காரணமான குரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திக்ரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
 இதுகுறித்து காவல்நிலைய ஆய்வாளர் ரமலா ராஜீவ் பிரதாப் சிங் கூறுகையில், தரம்பால் விறகு பொறுக்க சென்ற போது அங்கிருந்த குரங்குகள் வீசிய செங்கற்கள் தலை மற்றும் நெஞ்சுப்பகுதியில் தாக்கியே தனது சகோதரர் இறந்து போனதாகவும், அவரது மரணத்திற்கு காரணமான குரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது சகோதரர் கிருஷ்ணபால் சிங் புகார் கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.
 கிருஷ்ணபால் சிங் கூறுகையில், குரங்குகளுக்கு எதிராக கொடுத்த புகார் மனுவை போலீஸார் ஏற்க மறுத்து விட்டனர். அது ஒரு விபத்து எனக்கூறி போலீஸார் புகாரைப்பதிவு செய்யாமல் தவிர்க்கின்றனர். எனவே, இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்து முறையிடப் போவதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com