2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தந்தால் பள்ளியின் உரிமம் ரத்து: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 
2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தந்தால் பள்ளியின் உரிமம் ரத்து: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. முதல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடத்திட்ட விதிகளை மீறி, சிபிஎஸ்இ பள்ளிகள் ஒன்று முதல் 3 -ஆம் வகுப்பு வரை 8 பாடங்களைப் போதிக்கின்றன. சிறு குழந்தைகளுக்கும் வீட்டுப் பாடம், அசைன்மென்ட் போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. தனியாரிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக இந்தப் பாடங்களை தனியார் பள்ளிகள் குழந்தைகள் மீது திணிக்கின்றன.

குழந்தைகள் தங்களது எடையைக் காட்டிலும் கூடுதல் எடையை புத்தக சுமையாக சுமந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமென உத்தரவிட வேண்டும் என வழக்குரைஞர் எம்.புருஷோத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பள்ளிகளில் 2 -ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அனைத்து மாநில பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களும் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய, அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தெலங்கானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் இந்த உத்தரவை பின்பற்றி அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது எனவும் விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com