கடந்த 4 ஆண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது - மத்திய நேரடி வரிகள் ஆணையம்

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 1.40 லட்சமாக அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 
கடந்த 4 ஆண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது - மத்திய நேரடி வரிகள் ஆணையம்

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 1.40 லட்சமாக அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி) திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

கடந்த 4 ஆண்டுகளுக்கான வருமான வரி மற்றும் நேரடி வரிகளின் முக்கியப் புள்ளி விவரத்தை சிபிடிடி இன்று வெளியிட்டது. அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை 1,40,139 ஆக அதிகரித்துள்ளது. 2014-15 ஆண்டில் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமான ஈட்டும் நபர்களின் எண்ணிக்கை 88,649 ஆக இருந்தது. இதன்மூலம், கடந்த 4 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. 

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கையும் கடந்த 4 ஆண்டுகளில் 68 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014-15 ஆண்டில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை 48,416 ஆக இருந்தது. இது 2017-18 ஆண்டில் 81,344 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தப் புள்ளிவிவரம் மூலம், கடந்த 4 ஆண்டுகளில் வருவமான வரித் தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கையும் 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 3.79 கோடி ஆக இருந்தது. 2017-18 ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 6.85 கோடி ஆக உள்ளது. 

கடந்த 4 ஆண்டுகளில் வருமான வரித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரதிபலிப்பு தான் இது என்று சிபிடிடி தலைவர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com