ஒடிஸாவில்.. முதல் முறையாக பெட்ரோல் விலையை விட அதிக விலைக்கு விற்பனையாகும் டீசல்

சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக ஒடிஸாவில் பெட்ரோலை விட அதிக விலைக்கு டீசல் விற்பனையாகி வருகிறது.
ஒடிஸாவில்.. முதல் முறையாக பெட்ரோல் விலையை விட அதிக விலைக்கு விற்பனையாகும் டீசல்


புவனேஸ்வர்: சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில் முதல் முறையாக ஒடிஸாவில் பெட்ரோலை விட அதிக விலைக்கு டீசல் விற்பனையாகி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக ஒடிஸாவில் பெட்ரோலை விட கூடுதல் விலைக்கு டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதாவது, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.65க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 12 பைசா அதிகமாக டீசல் லிட்டருக்கு ரூ.80.78க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாஜகவின் தவறான கொள்கை முடிவுகளால் இதுபோன்ற விலை மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக ஒடிஸா நிதித்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து உத்கல் பெட்ரோலியம் டீலர்களின் சங்கப் பொதுச் செயலர் சஞ்சய் லத் கூறுகையில், மற்ற மாநிலங்கள் டீசல் மற்றும் பெட்ரோலுக்கு தனித்தனி வாட் வரி விதித்துள்ளன. ஆனால் ஒடிஸாவில் இரண்டுக்குமே பொதுவாக 26 சதவீத வாட் வரியே விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒடிஸாவில் டீசல் விலை ஏற்றத்தால் விற்பனை சரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com