சபரிமலை தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுக்கள் மீது விசாரணை எப்போது?: உச்ச நீதிமன்றம் இன்று முடிவு

சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தேதியை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடிவு செய்யவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சபரிமலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தேதியை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை முடிவு செய்யவுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து அளித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் கடந்த 9-ஆம் தேதி தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அப்போதே தெரிவித்து விட்டது.
இந்த நிலையில், இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கெளல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தன.அப்போது மனு தாக்கல் செய்த அமைப்புகளில் ஒன்றான தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா, இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிராக 19 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதான விசாரணை தேதியை செவ்வாய்க்கிழமை முடிவு செய்வோம் என்று கூறினர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. எனினும், 5 நீதிபதிகளில் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com