தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம்


புது தில்லி: நாடு முழுவதும் தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ தடையில்லை என்று தீர்ப்பளித்துள்ளது.

ஆனால், உற்பத்தி, விற்பனை என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிக்கவும் கட்டுப்பாடு விதித்திருப்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

அதன்படி, தீபாவளி பண்டிகையின் போது நாள் முழுக்க பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை அதாவது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.

இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், அனைத்து நகரங்களுக்கும் பொருந்தும் என்றும், இந்த விதிமுறை கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், தனியார் நிகழ்ச்சிகளில் அனுமதி பெற்று பசுமைப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் குறைந்த மாசை உமிழும் பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தில்லியில் குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்கப்படுவதாகவும், பட்டாசு வெடிக்க உடனடியாகத் தடை விதித்துவிட முடியாது என்றும், படிப்படியாகத்தான் கொண்டு வர முடியும் என்றும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com