நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை செவ்வாய்க்கிழமை (அக்.23) வெளியிடவுள்ளது.
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரும் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு


நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை செவ்வாய்க்கிழமை (அக்.23) வெளியிடவுள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில், காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கு, நாடு முழுவதும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், அதை விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. 
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து, நீதிபதிகள் தங்களது தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வெளியிடலாம் எனத் தெரிகிறது.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்றபோது, பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு இருக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை, நாட்டு மக்கள் 130 கோடி பேரின் ஆரோக்கியம் தொடர்பான உரிமை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தாங்கள் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டியிருப்பதாக குறிப்பிட்டனர்.
அப்போது பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில், பட்டாசுக்கு முழுவதும் தடை விதிக்கக் கூடாது, கடுமையான நடைமுறைகளுடன் பட்டாசை தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com