பாலியல் குற்றச்சாட்டு விசாரணைக் குழு விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும்: மேனகா காந்தி

பாலியல் குற்றச்சாட்டு விசாரணைக் குழு விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும்: மேனகா காந்தி

பெண்கள், தங்களது பணியிடங்களில் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக கூறும் "மீ டூ' பிரசாரம், இந்தியாவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. 

பெண்கள், தங்களது பணியிடங்களில் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக கூறும் "மீ டூ' பிரசாரம், இந்தியாவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. 

"மீ டூ' விவகாரம் தொடர்பாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி, கூறியதாவது:
 "மீ டூ' பிரசாரத்தில் ஒவ்வொரு பெண்களும் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் உள்ள வலியையும் வேதனையையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

அரசியல் கட்சிகள் உள் விசாரணை குழுவை அமைக்க கோரி அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இங்கு 6 தேசிய கட்சிகள், 90 சிறிய கட்சிகள் உள்ளது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படுவது குறித்து தெரிவிக்க வேண்டும். குழுவில் இடம் பெற்றுள்ளவர்களின் பெயர்களையும் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று  அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, செவ்வாய்கிழமை கடிதம் எழுதியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com