பிகாரில் தொகுதி பங்கீடு: பாஜகவின் திட்டத்தை நிராகரித்தது பாஸ்வான் கட்சி

மக்களவை தேர்தலை முன்னிட்டு, பிகாரில் உள்ள 40 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் முன்வைத்த திட்டத்தை மத்திய அமைச்சர்
பிகாரில் தொகுதி பங்கீடு: பாஜகவின் திட்டத்தை நிராகரித்தது பாஸ்வான் கட்சி


மக்களவை தேர்தலை முன்னிட்டு, பிகாரில் உள்ள 40 தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் முன்வைத்த திட்டத்தை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சி நிராகரித்துவிட்டதாக தெரிகிறது.
இதுதொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
பிகாரில் உள்ள 40 தொகுதிகளை பங்கிட்டு கொள்வது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளான பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் பாதிக்கு பாதி என்ற திட்டத்தை முன்வைத்துள்ளன. அதன்படி, தலா 17 தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் போட்டியிடும். மீதமுள்ள 6 தொகுதிகளில், மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக்ஜன சக்தி கட்சிக்கு (எல்ஜேபி) 4 தொகுதிகளும், உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு (ஆர்எல்எஸ்பி) 2 தொகுதிகளும் ஒதுக்கப்படும்.
இந்த தொகுதி பங்கீடு திட்டம், இந்த கட்சிகளை அதிருப்தியடையச் செய்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மக்களவைத் தேர்தலில் லோக் ஜன சக்தி கட்சி 7 இடங்களில் போட்டியிட்டு, 6 இடங்களில் வெற்றி பெற்றது. ஆர்எல்எஸ்பி கட்சி, போட்டியிட்ட 3 தொகுதிகளிலுமே வெற்றி பெற்றது.
இதுதொடர்பாக பிகார் மாநில எல்ஜேபி கட்சித் தலைவரும் அமைச்சருமான பசுபதி குமார் பராஸ் கூறுகையில், 7 தொகுதிகளுக்கு குறைவாக நாங்கள் ஏற்கமாட்டோம். அதுமட்டுமன்றி, உத்தரப் பிரதேசத்திலும், ஜார்க்கண்டிலும் எங்களது கட்சிக்கு வலுவான செல்வாக்கு உள்ளதால், அந்த மாநிலங்களிலும் தொகுதிகள் ஒதுக்க கோருவோம் என்றார்.
ஆர்எல்எஸ்பி கட்சியின் தேசிய பொதுச் செயலர் மாதவ் ஆனந்த் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ கூட்டம் நடைபெறவில்லை. அந்த கூட்டத்தில், மேற்கண்ட பாதிக்கு பாதி திட்டம் முன்வைக்கப்பட்டால், அதனை ஏற்கமாட்டோம். எங்களுக்கு 3 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com