முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வாங்கும் திட்டம்: நாடு முழுவதும் நவம்பர் 1இல் அமல்

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கும் திட்டம், நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.


முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வாங்கும் திட்டம், நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
மின்சார ரயில்கள் அதிகம் இயக்கப்படும் மும்பையில் இந்த திட்டம் 2014ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தில்லி, சென்னை ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், வடகிழக்கு, மேற்கு மத்திய மண்டலங்கள் தவிர்த்து எஞ்சிய மண்டலங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து ரயில்வேத் துறை மூத்த அதிகாரி கூறுகையில், யுடிஎஸ் செல்லிடப் பேசி செயலி மூலம் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் திட்டத்தில் சில மண்டலங்கள் முன்பு இல்லை. வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் அந்த மண்டலங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது வெகுதொலைவு ரயிலில் பயணிப்போரும், முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை இந்த செயலி மூலம் வாங்கி கொள்ளலாம் என்றார்.
ரயில் நிலைய விற்பனை கவுன்ட்டர்களில் முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை வாங்குவதற்கு பயணிகள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை. இதை தவிர்ப்பதற்கு, யுடிஎஸ் செல்லிடப்பேசி செயலி மூலம் முன்பதில்லாத ரயில் டிக்கெட்டுகளை வாங்கும் திட்டத்தை ரயில்வே 2014இல் அறிமுகப்படுத்தியது. இந்த செயலியில் இதுவரை 45 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த செயலி வாயிலாக நாளொன்றுக்கு 80,000 டிக்கெட்டுகளை பயணிகள் வாங்கி வருகின்றனர்.
யுடிஎஸ் செயலியின் மூலம் ஒரே முறையில் 4 டிக்கெட்டுகளை பயணிகள் பெற முடியும். இதில் ரயில் டிக்கெட்டுகளை மட்டுமல்லாமல், நடைமேடை டிக்கெட்டுகள், மாதாந்திர பயணிகள் பாஸ்கள் ஆகியவற்றையும் பெற முடியும். இத்தகைய டிக்கெட்டுகள் விற்பனையின் முலம், ரயில்வேக்கு நாளொன்றுக்கு ரூ.45 லட்சம் லாபம் கிடைப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com