மேற்குவங்கம்: ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் சாவு

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்திராகாச்சி ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
கூட்ட நெரிசல் நேரிட்ட சந்திராகாச்சி ரயில் நிலையம்.
கூட்ட நெரிசல் நேரிட்ட சந்திராகாச்சி ரயில் நிலையம்.


மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்திராகாச்சி ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 17 பேர் காயமடைந்தனர்.
சந்திராகாச்சி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் நடைமேடை 2, 3 ஆகியவற்றில் 3 ரயில்கள் ஒரே நேரத்தில் வந்தன. அதில் ஒரு ரயில், நாகர்கோயில்-சாலிமர் விரைவு ரயில் ஆகும். இதேபோல் மேலும் 2 ரயில்களின் வருகை தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அந்த ரயில்களில் செல்ல வேண்டிய பயணிகள் சம்பந்தப்பட்ட நடைமேடைகளுக்கு அங்குள்ள நடைமேம்பாலம் வழியாக விரைந்து வந்தனர். அதேபோல், ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்களில் இருந்த பயணிகள் சிலர், நடைமேம்பாலத்தில் ஏற முயன்றனர். இதனால் நடைமேம்பாலத்தில் கூட்ட நெரிசல் நேரிட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகினர். 17 பேர் காயமடைந்தனர். இதில் சிலரின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும், சந்திராகாச்சி ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்து முதல்வர் மம்தா பானர்ஜி ரயில் நிலையம் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் மேற்கு வங்க அரசால் நிவாரணமாக வழங்கப்படும். இந்த விபத்துக்கு ரயில்வேயின் கவனக்குறைவு உள்ளிட்டவையே காரணமாகும். இதுகுறித்து நிர்வாக ரீதியிலான விசாரணையை மேற்கு வங்க அரசு நடத்தும் என்றார்.
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸில் அண்மையில் தண்டவாளத்தை கடந்து சென்ற ரயில்கள் மோதி, 60 பேர் பலியாகினர். 
இந்த சம்பவம் நடைபெற்று சில தினங்களே ஆகும் நிலையில், இந்த விபத்து நேரிட்டிருப்பது ரயில்வே மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com