வழிபட உரிமை உண்டு; புனிதத்தை கெடுக்க உரிமை இல்லை: சபரிமலை விவகாரத்தில் ஸ்மிருதி இரானி கருத்து

சபரிமலை ஐயப்பன் கோயில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், வழிபட உரிமை
வழிபட உரிமை உண்டு; புனிதத்தை கெடுக்க உரிமை இல்லை: சபரிமலை விவகாரத்தில் ஸ்மிருதி இரானி கருத்து


சபரிமலை ஐயப்பன் கோயில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், வழிபட உரிமை உண்டு; ஆனால் புனிதத்தைக் கெடுக்க உரிமை இல்லை என்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்துத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் பிரிட்டன் துணைத் தூதரகம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற யங் திங்க்கர்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:
மத்திய அமைச்சராகப் பதவி வகித்து வரும் எனக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பேச எனக்கு உரிமை இல்லை. எனினும், இது தொடர்பாக எனது கருத்தைத் தெரிவிக்கிறேன். பெண்களாகிய நாம் பயன்படுத்திய நாப்கின் னுடன் தோழியின் வீட்டுக்குச் செல்வோமா? நிச்சயமாக இல்லை. அதேபோல, புனிதமிக்க கடவுளின் இருப்பிடத்துக்கு அப்படி செல்வதை எப்படி நினைத்துப் பார்க்க முடியும்? அதேபோல எந்தக் கோயில் என்றாலும் அங்கு சென்று வழிபட உரிமை உண்டு, ஆனால், அதன் புனிதத்தைக் கெடுக்க உரிமை இல்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.
நான் ஹிந்து மதத்தைப் பின்பற்றுகிறேன். எனது கணவர் ùஸாராஷ்டிர மதத்தைச் சேர்ந்தவர். எனது இரு குழந்தைகளையும் கணவரது மத வழிபாட்டில் பங்கேற்க நான் அனுமதிக்கிறேன். அவர்கள் அந்த கோயிலுக்கு செல்லும்போது நான் வெளியே காத்திருப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன் என்றார் அவர்.
தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடிமக்கள் சட்டத் திருத்தம் குறித்துப் பேசிய ஸ்மிருதி இரானி, அகதிகள் யார், சட்டவிரோதமாக நமது நாட்டில் குடியேறியவர்கள் யார் என்பதை வேறுபடுத்த வேண்டியுள்ளது. 
ஒருவர் வேறுநாட்டில் இருந்து இங்கு ஊடுருவி, போலியான ஆவணங்கள் மூலம் நமது மக்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளை பெறுவதை அனுமதிக்க முடியுமா? இது உண்மையான இந்திய குடிமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? நமது நாட்டு மக்களின் வரிப் பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பலன்கள் நமது குடிமக்களுக்குதானே முழுமையாக கிடைக்க வேண்டும். 
அதனை வேறு நாட்டவருக்கு வழங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com