முன்னாள் ராணுவ வீரா்களை அவமானப்படுத்தும் தில்லி அரசு: குற்றம் சாட்டும் பாஜக 

முன்னாள் ராணுவ வீரா்களை தில்லி அரசு தொடர்ந்து அவமானப்படுத்துவதாக தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
முன்னாள் ராணுவ வீரா்களை அவமானப்படுத்தும் தில்லி அரசு: குற்றம் சாட்டும் பாஜக 

புது தில்லி: முன்னாள் ராணுவ வீரா்களை தில்லி அரசு தொடர்ந்து அவமானப்படுத்துவதாக தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக தில்லி பாஜக பொதுச் செயலா் குல்ஜீத் சிங் சாகல் தில்லியில் செவ்வாய்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராணுவ வீரா்களை அவமதிப்பதை கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. பாகிஸ்தான் பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியபோது, அந்தத் தாக்குதல் நடைபெறவேயில்லை என்றும், அத்தாக்குதல் பொய்யானது என்றும் கேஜரிவால் கூறினாா்.

பிறகு துல்லிய தாக்குதல் தொடா்பான ஆதாரங்களை மத்திய அரசு வெளியிட்டபோது, தங்களது செயலுக்காக கேஜரிவால் மன்னிப்புக் கூட கேட்கவில்லை. இந்நிலையில் தில்லியில் அரசு மருத்துவமனைகளில் பாதுகாவலா்களாக பணியில் இருந்த சுமாா் ஆயிரம் முன்னாள் ராணுவ வீரா்களை தில்லி அரசு தற்பொழுது பணிநீக்கம் செய்துள்ளது.

இவா்களுக்குப் பதிலாக தனியாா் நிறுவன பதுகாவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இது முன்னாள் ராணுவ வீரா்களை அவமதிக்கும் செயலாகும். அந்த ராணுவ வீரா்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை நினைவுகூா்ந்தாவது அவா்களின் பணிநீக்கத்தை ரத்துச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com