ராகுல் காந்தி தெலங்கானாவில் கால் வைத்தாலே எங்களுக்கு வெற்றிதான்: சந்திரசேகர் ராவ் கிண்டல் 

ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தெலங்கானாவில் கால் வைத்தாலே எங்களுக்கு வெற்றிதான் என்று தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி தெலங்கானாவில் கால் வைத்தாலே எங்களுக்கு வெற்றிதான்: சந்திரசேகர் ராவ் கிண்டல் 

ஹைதராபாத்: ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தெலங்கானாவில் கால் வைத்தாலே எங்களுக்கு வெற்றிதான் என்று தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் ஆட்சிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் மற்றும் சட்டீஸ்கார்  மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களோடு, தெலங்கானா மாநிலத் தேர்தலையும் நடத்த சந்திரசேகர் ராவ் விரும்புகிறார்.

அதற்கு ஏதுவாக பேரவையைக் கலைப்பது குறித்து முடிவெடுக்க மாநில அமைச்சரவை வியாழக்கிழமை கூடியது. கூட்டத்தில் சட்டப்பேரவையைக் கலைக்க அம்மாநில அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. பின்னர் மாலை முதல்வர் சந்திரசேகர் ராவ் மாநில ஆளுநர் நரசிம்மனைச் சந்தித்து, அமைச்சரவையின் பரிந்துரையினை அளித்தார்.  இதுதொடர்பான முறைப்படியான அறிவிப்பை ஆளுநர் நரசிம்மன் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தெலங்கானாவில் கால் வைத்தாலே எங்களுக்கு வெற்றிதான் என்று தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஆளுநரிடம் பேரவைக் கலைப்பு பரிந்துரையை சமர்ப்பித்த பின்னர், அதிரடியாக நடக்கவுள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதியின் 105 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர் ராவ் கூறியதாவது

நடைபெறவுள்ள தெலங்கானா சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கிடையாது. 100 சதவிதம் நாங்கள் மதசார்பற்ற கட்சி. நாங்கள் எப்படி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடியும்?

தெலங்கானாவில் 2014-ம் ஆண்டுக்கு முன்னர் குண்டு வெடிப்புகள், மின்சார பிரச்சனைகள் மதவாத மோதல்கள் ஆகியவை இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் இவை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.

இப்போது களத்திற்கு வருமாறு காங்கிரஸ் தலைவர்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கிறேன், காத்திருக்கும் பொதுமக்கள் அவர்களுக்கு சரியான பதிலடியை கொடுப்பார்கள். ராகுல் காந்தி இந்தியாவின் மிகப்பெரிய ஒரு கோமாளி என்பது அனைவருக்கும் தெரியும். மோடி அருகே சென்று அவரை கட்டிப்பிடித்து, கண் அடித்ததை இந்தியாவே வேடிக்கை பார்த்தது.

ராகுல் காந்தி எங்களுக்கு ஒரு சொத்து போன்றவர். அவர் பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்காக தெலங்கானாவில் கால் வைத்தாலே எங்களுக்கு வெற்றிதான்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com