தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு: தெலங்கானா செல்கிறது தேர்தல் ஆணையக் குழு

தெலங்கானாவில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதை அடுத்து தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய தேர்தல் ஆணையக் குழு வருகின்ற 11-ஆம் தேதி அம்மாநிலத்துக்கு செல்கிறது.
தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு: தெலங்கானா செல்கிறது தேர்தல் ஆணையக் குழு

தெலங்கானாவில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதை அடுத்து தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய தேர்தல் ஆணையக் குழு வருகின்ற 11-ஆம் தேதி அம்மாநிலத்துக்கு செல்கிறது.

தெலங்கானா புதிய மாநிலமாக உதயமான பிறகு, அங்கு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான டிஆர்எஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. 

சந்திரசேகர் தலைமையிலான அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைய இன்னும் 9 மாதங்கள் மீதமிருந்த நிலையில், நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவையை கலைப்பதற்கு பரிந்துரைக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

இந்த தீர்மானத்தின் பிரதியை அம்மாநில ஆளுநர் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார். மறுதேர்தல் நடைபெறும் வரை காபந்து அரசை நடத்துமாறு சந்திரசேகர் ராவிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார். 

இதையடுத்து, தெலங்கானாவில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், தெலங்கானாவில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டதையடுத்து தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய தேர்தல் ஆணையக் குழு வருகின்ற 11-ஆம் தேதி தெலங்கானாவுக்கு செல்கிறது. இதையடுத்து, இந்தக் குழுவினர் தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்பிக்கவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com