மோடி அரசின் தோல்விகளைச் சுட்டிக்காட்டி மன்மோகன் சிங் குற்றச்சாட்டு 

விவசாய பிரச்னைகளை மோடி அரசாங்கம் ஆக்கப்பூர்வமாக கையாளவில்லை உள்ளிட்ட மத்திய அரசின் பல தோல்விகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டி குற்றம்சாட்டினார். 
மோடி அரசின் தோல்விகளைச் சுட்டிக்காட்டி மன்மோகன் சிங் குற்றச்சாட்டு 

விவசாய பிரச்னைகளை மோடி அரசாங்கம் ஆக்கப்பூர்வமாக கையாளவில்லை உள்ளிட்ட மத்திய அரசின் பல தோல்விகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சுட்டிக்காட்டி குற்றம்சாட்டினார். 

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது, 

"2014 மக்களவை தேர்தல் நேரத்தில் மக்களிடம் உறுதியளித்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய இந்த அரசின் தோல்விகளை இந்த புத்தகம் எடுத்துரைக்கிறது. 

இந்தியா எதிர்கொள்ளும் விவசாய பிரச்னைகளை மோடி அரசாங்கம் ஆக்கப்பூர்வமாக கையாளவில்லை. அதன் விளைவாகத் தான் தில்லி மற்றும் பிற மாநில தலைநகரங்களில் அரங்கேறும் போராட்டங்களில் விவசாயிகள் உயிரிழக்கின்றனர். விவசாயிகளின் பொருட்களுக்கு இதுவரை லாபகரமான விலை நிர்ணயம் உறுதிசெய்யப்படவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் அவசரமாக கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி குறு, சிறு நிறுவனங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 4 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு வளர்ச்சியில் முன்னேற்றமே இல்லை. வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணங்களை கொண்டு வர எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மந்தமான நிலையில் தான் உள்ளது. தொழில் நிறுவன உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் எழுந்திடு இந்தியா போன்ற திட்டங்கள் இதுவரை அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

கடந்த 4 ஆண்டுகளில் பக்கத்து நாட்டுடனான உறவுகள் மோசமடைந்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் குறித்தான விஷயங்களை எடுத்துரைக்க மோடி அரசாங்கம் தவிறிவிட்டது" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com