நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை - இன்றும் உயர்வு

நாளுக்கு நாள் உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை - இன்றும் உயர்வு

நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை)  முறையே 12 காசுகளும், 11 காசுகளும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை)  முறையே 12 காசுகளும், 11 காசுகளும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

பெட்ரோல், டீசலுக்கான விலை உயர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி முதல் இடையில் 3 முறை உயராமல் இருந்தாலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 83.66 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 76.75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தில்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 80.50 ரூபாய்க்கும், டீசல் 72.61 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 87.89 ரூபாய்க்கும், டீசல் விலை 77.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்படி நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருவதால் மக்கள் மிகப் பெரிய சிரமத்துக்குள் உள்ளாகியுள்ளனர். இந்த கடுமையான விலை உயர்வால் அத்தியாவசிய விலை பொருட்களின் விலை அதிகரிப்பதற்கும் வாய்ப்புள்ளது. 

எரிபொருள்களின் விலையை குறைக்கும் வகையில் கலால் வரியை குறைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், வருவாய் இழப்பை குறிப்பிட்டு, கலால் வரியை குறைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

இதுதொடர்பாக, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை தெரிவிக்கையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து முழுமையாகச் சிந்திக்காமல், அவசர உணர்ச்சிப் போக்கில் அரசால் செயல்பட முடியாது என்றார். இதன்மூலம், அவர் பெட்ரோல், டீசலுக்கான வரி குறைக்கப்பட மாட்டாது என்பதை சூசகமாக தெரிவித்துள்ளாரா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. 

இதனிடையே, பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நாளை (திங்கள்கிழமை) பாரத் பந்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com