உச்ச நீதிமன்றமே எங்களுடையது: ராமர் கோவில் விவகாரத்தில் உ.பி அமைச்சரின் பேச்சால் அதிர்ச்சி 

உச்ச நீதிமன்றமே எங்களுடையது: ராமர் கோவில் விவகாரத்தில் உ.பி அமைச்சரின் பேச்சால் அதிர்ச்சி 

உச்ச நீதிமன்றமே எங்களுடையது என்பதால் அயோத்தியில் ராமர் கோவிலை உறுதியாகக் கட்டுவோம் என்று உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.  

கான்பூர்: உச்ச நீதிமன்றமே எங்களுடையது என்பதால் அயோத்தியில் ராமர் கோவிலை உறுதியாகக் கட்டுவோம் என்று உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.  

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கிறது. இதனால் சம்மந்தப்பட்ட தரப்பினர் நீதிமன்ற தீர்ப்பினை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றமே எங்களுடையது என்பதால் அயோத்தியில் ராமர் கோவிலை உறுதியாகக் கட்டுவோம் என்று உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா அரசில், முக்த் பிஹாரி வர்மா  கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவர் அம்மாநிலத்தின் பஹாரெய்ச் நகரில் செய்தியாளர்களுக்கு சனியன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அயோத்தியில் நிலவி வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து, விரைவில் அங்கு ராமர் கோவிலைக் கட்டுவோம். உச்ச நீதிமன்றமே எங்களுடையது என்பதால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து அயோத்தியில் ராமர் கோவிலை உறுதியாகக் கட்டுவோம்

வளர்ச்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சிக்கு வந்திருந்தாலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் பாஜக உறுதியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு சமூக ஊடகங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் விளக்கம் அளித்து பேசிய அமைச்சர் பிஹாரி வர்மா, 'நான் கூறியதன் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த நாட்டின் குடிமக்களான நாங்கள் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்' என்ற அர்த்தத்தில் கூறினேன். மற்றபடி நீதிமன்றம் எங்களுடைய அரசாங்கத்துக்குச் ஆதரவானது என்ற அர்த்தத்தில் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com