மோடி சொன்னபடி பெட்ரோல் விலையைக் குறைத்துக்காட்டிவிட்டார்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையிலும், நேற்று விலை உயர்வு நீடித்தது.
மோடி சொன்னபடி பெட்ரோல் விலையைக் குறைத்துக்காட்டிவிட்டார்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!!


பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் நேற்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்ட நிலையிலும், நேற்று விலை உயர்வு நீடித்தது.

பெட்ரோல், டீசல் விலைகள் நேற்றும் உயர்ந்து, எதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று மெய்ப்பித்தது.

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலைகள் காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் கடுமையாக உயர்ந்ததாகவும், தற்போது புள்ளி விவரங்களைப் பார்த்தால் பெட்ரோல் விலை குறைந்திருப்பதாகவும் (?) தெரிவிக்கப்பட்டது. இப்படி யார் சொல்வார்கள் சாட்சாத் பாஜக தான் சொல்லியது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பார்த்து ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏராளமான நெட்டிசன்கள் ஏற்கனவே பாஜகவை பந்தாடி வரும் நிலையில், விலை குறைந்துள்ளது என்று பாஜக சொல்லியிருக்கும் வரைபடத்தை சும்மா விடுவார்களா என்ன? சமூக வலைத்தளங்களில் 'வைத்து செய்தார்கள்' என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான்.

அதாவது விலை குறைந்திருப்பதாக பாஜக வெளியிட்ட வரைபடத்தை பதிவிட்டு, அதற்கு ஒரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது, ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக மோடி வாக்குறுதி அளித்திருந்தார். அவர் சொன்னபடியே இந்த வரைபடத்தில் பெட்ரோல், டீசல் விலைகளைக் குறைத்துவிட்டார் சபாஷ் என்று பதிவிட்டுள்ளார்கள்.
 

இந்த வரைபடத்தில் பாஜக என்ன சொல்ல வருகிறது என்றால், 2004ம் ஆண்டு மே மாதம் பெட்ரோல் விலை ரூ.21.74 ஆக இருந்த நிலையில் 2009  மே மாதம் விலை 42% உயர்ந்து ரூ.30.86 ஆக உயர்ந்தது. அது 2014ம் ஆண்டு மே மாதம் 83.7% உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.56.71 ஆக உயர்ந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் விலை படிப்படியாகக் குறைந்து 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28% விலை குறைந்து ரூ.72.83க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று புரிய வைக்க முயல்கிறது பாஜக. (கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியா வருகிறதா?)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com