70 கிலோ தங்கம்.. 350 கிலோ வெள்ளி.. 264 கோடி ரூபாய் இன்ஷ்யூரன்ஸ்: மும்பையின் அசத்தல் பிள்ளையார் 

மும்பையில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டுள்ள பெரிய பிள்ளையார் சிலையொன்று அலங்கரிக்கப்பட்டுள்ள நகைகளின் காரணமாக, ரூ.264 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 
70 கிலோ தங்கம்.. 350 கிலோ வெள்ளி.. 264 கோடி ரூபாய் இன்ஷ்யூரன்ஸ்: மும்பையின் அசத்தல் பிள்ளையார் 

மும்பை: மும்பையில் விநாயகர் சதுர்த்திக்காக வைக்கப்பட்டுள்ள பெரிய பிள்ளையார் சிலையொன்று அலங்கரிக்கப்பட்டுள்ள நகைகளின் காரணமாக, ரூ.264 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

மும்பையில் விநாயகர் சதுர்த்தியினை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் வெவேறு விதமான விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, மக்கள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிலைகளைகள் 'மண்டல்' எனப்படும் வழிபாட்டுக் குழுக்கள் பராமரிக்கின்றன. 

அத்தகைய குழுக்களில் ஒன்றுதான் 'கௌட் சரஸ்வத் பிரம்மன்' . சுமார் 64 வருடங்களாக மும்பையில் இயங்கி வரும் இந்த குழுவானது தற்போது விநாயகர் சிலையொன்றினை மும்பையில் நிறுவியுள்ளது. இத்தனை வருடங்களாக இந்த குழுவிற்கு பக்தர்கள் வழங்கியுள்ள நன்கொடைகளிலிருந்து, 70 கிலோ தங்கம் மற்றும் 350 கிலோ வெள்ளி ஆகியவற்றில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கப்பட்டு, அந்த விநாயகர் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

இந்த சிலை வைக்கப்பட்டுள்ள பந்தலானது கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த சிலை மற்றும் ஆபரணங்களுக்காக ரூ. 264 கோடிக்கு காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.   

இதுகுறித்து கௌட் சரஸ்வத் பிரம்மன் விநாயகர் வழிபாட்டுக் குழுவின் செய்தித் தொடர்பாளர் பட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த சிலை இன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். சிலை நிறுவப்பட்டுள்ள இடத்தில் 65 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.  அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 500 பணியாளர்களை அமர்த்தியுள்ளோம். அத்துடன் ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்படுகின்றன. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com