தில்லி ஹோட்டலில் நீரவ் மோடியுடன் ராகுல் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன்: சமூக ஆர்வலர் ஷெஜாத் புனாவாலா

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி மோசடி செய்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடியுடன்,
தில்லி ஹோட்டலில் நீரவ் மோடியுடன் ராகுல் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தேன்: சமூக ஆர்வலர் ஷெஜாத் புனாவாலா

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.13,000 கோடி மோசடி செய்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடியுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் உள்ள ஹோட்டலில் பேசிக் கொண்டிருந்ததை தாம் பார்த்ததாக சமூக ஆர்வலர் ஷெஜாத் புனாவாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதியன்று, தில்லி ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் நீரவ் மோடியை சந்தித்து பேசியதை மறுக்க முடியுமா? என்று ராகுல் காந்திக்கு நான் சவால் விடுக்கிறேன். அந்த ஹோட்டலில் ராகுல் நீண்ட நேரம் இருந்தார்.
அந்த காலக்கட்டத்தில்தான், நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி ஆகியோருக்கு கடன்கள் அளிக்கப்பட்டன. சிறப்பு பாதுகாப்புப் படையினரிடம் இதுதொடர்பான ஆதாரங்கள் இருக்கலாம் அல்லது உண்மைக் கண்டறியும் சோதனை நடத்தலாமா?
குரான் மீது ஆணையிட்டு இதை நான் தெரிவிக்கிறேன். நான் தெரிவிப்பது உண்மை என்பதை நிரூபிக்க உண்மைக் கண்டறியும் சோதனைக்கும் தயாராக உள்ளேன் என்று அந்தப் பதிவுகளில் புனாவாலா குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, இதே தகவலை புனாவாலா மீண்டும் தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறுகையில், நான் தெரிவிப்பதை பொய் என்று நிரூபித்தால், அரசியலில் இருந்து விலக தயாராக இருக்கிறேன்' என்றார்.
எனினும், புனாவாலா குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.
இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு விஜய் மல்லையா சென்று விட்டார். லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் ஆஜராக புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவை விட்டு வெளியேறும் முன்பு, மத்திய நிதியமைச்சரை சந்தித்து பேசினேன்' எனத் தெரிவித்திருந்தார். ஆனால், விஜய் மல்லையாவை தாம் சந்தித்து பேசவில்லை என்று ஜேட்லி மறுத்தார். இருப்பினும், மத்திய நிதியமைச்சர் பதவியிலிருந்து அருண் ஜேட்லி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். 
இந்நிலையில், ராகுல் காந்தி வியாழக்கிழமை மீண்டும் கூறுகையில், நாடாளுமன்றத்தில் விஜய் மல்லையாவுடன் அருண் ஜேட்லி சுமார் 20 நிமிடங்கள் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி அமர்ந்து பேசியது தொடர்பான ஆதாரம் எங்கள் கட்சி எம்.பி. பி.எல். புனியாவிடம் இருக்கிறது' எனத் தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை ராகுல் காந்தி தெரிவித்த சில மணி நேரங்களில், ராகுலுக்கு எதிராக புனாவாலா புகார் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com