தெலங்கானாவில் பாஜக தனித்துப் போட்டி: அமித் ஷா

தெலங்கானாவில் காங்கிரஸ் முதல் எதிரி, ஆளும் டிஆர்எஸ் கட்சியும் எதிரிக்கு சளைக்காத கட்சி தான் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார். 
தெலங்கானாவில் பாஜக தனித்துப் போட்டி: அமித் ஷா

தெலங்கானாவில் காங்கிரஸ் முதல் எதிரி, ஆளும் டிஆர்எஸ் கட்சியும் எதிரிக்கு சளைக்காத கட்சி தான் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார். 

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெலங்கானாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மெஹபூப்நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது, 

"சந்திரசேகர ராவ் எதற்காக 9 மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தலை நடைபெற வைக்கிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை ஆதரிக்காமல் தெலங்கானா மக்களின் கோடிக்கணக்கான பணத்தை ஏன் அவர் செலவிடுகிறார். சிறிய தேர்தல் அணுகூலங்களுக்காகவே தேர்தல் முன்கூட்டியே நடைபெறுகிறது.

மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆதரிக்காது என்பதை முழுவதும் தெரிந்துக்கொண்டே, சிறுபான்மையினருக்கு 12 சதவீத இடஒதுக்கீட்டுக்கான முன்மொழிதலை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தார். டிஆர்எஸ் கட்சிக்கு வாக்களித்தால் வாக்கு வங்கி அரசியல் கரை புரண்டு ஓடும் என்பது தெலங்கானா மக்களுக்கு தெரியும்" என்றார். 

இந்தக் கூட்டத்தில் டிஆர்எஸ் கட்சி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதாக அமித் ஷா சுட்டிக்காட்டினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com