ஒடிஸாவில் முதலீடு செய்ய பிரான்ஸ் விருப்பம்

ஒடிஸா மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்புவதாக பிரான்ஸில் இருந்து வந்த வணிகக் குழுவினர் அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சனிக்கிழமை சந்தித்த போது தெரிவித்தனர்.

ஒடிஸா மாநிலத்தில் முதலீடு செய்ய விரும்புவதாக பிரான்ஸில் இருந்து வந்த வணிகக் குழுவினர் அந்த மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கை சனிக்கிழமை சந்தித்த போது தெரிவித்தனர்.
 பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்டர் ஜிக்லெர் தலைமையில் பிரான்ஸ் வணிகக் குழுவினர், முதல்வர் அலுவலகத்தில் பட்நாயக்கை சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது மின்சாரம், மின் பொருள்கள், இரும்பு, விடுதி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளதாக முதல்வரிடம் அவர்கள் தெரிவித்தனர். வணிகக் குழுவினருடன் உரையாடிய போது முதல்வர் பட்நாயக் கூறியதாவது:
 உலகில் உள்ள பல முதலீட்டாளர்கள் ஒடிஸா மாநிலத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இரும்பு, பாக்சைட், குரோமைட் ஆகிய தாதுக்கள் அதிக அளவில் உள்ள மாநிலமாக ஒடிஸா விளங்குகிறது. அலுமினியம் தயாரிப்பில் தெற்கு ஆசியாவின் தலைநகராக ஒடிஸா உள்ளது. நாட்டில் 54 சதவீத அலுமினியம் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பாதுகாப்பு துறையில் புதிய கொள்கையை வகுத்து வருகிறோம் என்று முதலீட்டாளர்களுடன் உரையாடும் போது பட்நாயக் தெரிவித்தார். மேலும், நவம்பரில் நடைபெற உள்ள ஒடிஸாவில் தயாரிப்போம் நிகழ்ச்சியில் அனைவரையும் பங்கேற்குமாறு பட்நாயக் வேண்டுகோள் விடுத்தார்.
 முதல்வரை சந்தித்த பிறகு பிரான்ஸ் தூதர் தனது சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "வணிகக் குழுவினருடன் சென்று ஒடிஸா முதல்வரை சந்தித்ததில் மகிழ்ச்சி. மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு இந்த உரையாடல் பயனுள்ளதாக அமையும். மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான சூழ்நிலை திருப்திகரமாக உள்ளது. ஒடிஸா மற்றும் பிரான்ஸ் நாட்டிற்கு இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது' என்று பதிவிட்டிருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com