காஷ்மீரிகளுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு: பாக். அதிபரின் முதல் உரை

காஷ்மீரிகளுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு' என்று பாகிஸ்தான் புதிய அதிபர் ஆரீஃப் அல்வி தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார்.


காஷ்மீரிகளுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு' என்று பாகிஸ்தான் புதிய அதிபர் ஆரீஃப் அல்வி தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் புதிய அதிபராக அண்மையில் பதவியேற்ற அவர், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் திங்கள்கிழமை முதல் உரையை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவுடன் அமைதியான உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. இது இருதரப்பும் விரும்பும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும். காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டும். காஷ்மீர் பிரச்னைக்கு ஐ.நா.வின் வழிகாட்டுதல்களின் படி அமைதியான தீர்வுகாண வேண்டும். ஒருவரை மற்றொருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்வதால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்னைகளைத் தீர்த்து, நல்லுறவை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அண்டை நாடுகளுடன் மட்டுமின்றி அனைத்து இஸ்லாமிய நாடுகளுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது என்றார்.
அதிபரின் உரையைப் புறக்கணித்து எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது.
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் புதிய அதிபர், தனது முதல் உரையில் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்யண உரிமை உண்டு என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com